Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 25 April 2025
webdunia

6 மாதத்தில் ஆட்சி மாற்றம், ஸ்டாலின் தான் முதல்வர்: காங்கிரஸ் எம்பி ஆரூடம்

Advertiesment
கார்த்தி சிதம்பரம்
, வியாழன், 30 ஜூலை 2020 (07:14 IST)
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும், முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் காங்கிரஸ் எம்பி ஒருவர் ஆருடம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்களின் மகனும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திற்கு நல்ல முடிவு கிடைக்கும் என்றும், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணிக்கு தயாராக உள்ளது என்றும், அடுத்து நடைபெறும் தேர்தலில் கண்டிப்பாக எங்கள் கூட்டணி வெற்றி பெற்று முக ஸ்டாலின் ஆட்சியில் அமருவார் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய மாநில அரசிடம் அதனை தடுக்க சரியான யுக்திகள் இல்லை என்றும் உலக அளவில் தடுப்பு மருந்துகள் வந்தால்தான் இதற்குத் தீர்வு ஏற்படும் என்றும் லாக்டவுனால் மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
 
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட திட்டமிடுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் இவ்வாறு பேசி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக கொரோனா பாதிப்பு 1.71 கோடி: அமெரிக்காவில் ஒரே நாளில் 66,405 பேருக்கு பாதிப்பு