சித்தராமையா பதவியேற்கும் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு!

Webdunia
வியாழன், 18 மே 2023 (15:01 IST)
கர்நாடக மாநில முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கும் சித்தராமையா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
 கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்ய ஒரு வாரம் தாமதம் ஆனாலும் தற்போது சித்தராமையா முதல்வர் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் நாளை மறுநாள் பெங்களூரில் சித்தராமையா முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்வார் என்றும் அவர் அடுத்து துணை முதல்வராக டி கே சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் சிலர் பதவி ஏற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சித்தராமையா பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஒரு சில மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments