Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை! – அமைச்சர்கள் பங்கேற்பு!

Advertiesment
கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை! – அமைச்சர்கள் பங்கேற்பு!
, வியாழன், 3 ஜூன் 2021 (08:52 IST)
இன்று தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இன்று திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் பிறந்தநாள் திமுக தொண்டர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உள்ள நிலையில் தொண்டர்கள் வீடுகளில் இருந்தபடியே கலைஞர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செய்து பிறந்தநாளை எளிமையாக கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று மு.கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள மு.கருணாநிதியின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் சென்று மரியாதை செலுத்தினர். பின்னர் நினைவிடத்தில் மரக்கன்று நட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், நினைவிட பராமரிப்பாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களிடம் 1.64 கோடி தடுப்பூசிகள் உள்ளது! – மத்திய அரசு தகவல்!