Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (10:38 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் போராட்டம் நடந்த நிலையில் அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு அந்த விசாரணை கமிஷனின் இடைக்கால அறிக்கை சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 3 பேரின் குடும்பத்துக்கு பணிநியமனம் செய்யப்படும் என ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவரே முதல்வராக ஆகியுள்ள நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார் 
 
மேலும் தீவிர காயமடைந்த 3 பேருக்கும் பணி நியமன ஆணையை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பணி நியமனம் பெற்ற அனைவரும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

10 சதுர அடி வீட்டில் 80 வாக்காளர்கள்.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு..!

கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்து திமுக அடிமையாக வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் இன்று ஒரு நாடகம் அரங்கேற்றம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments