Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லட்சம் விவசாயிகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (10:49 IST)
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு 1 லட்சம் மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகள் 1 லட்சம் பேருக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முன்னதாக திமுக அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று அண்ணா நூலகத்தில் 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் தருவதற்கான ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் பேசிய அவர் “விவசாயத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் 4.3 லட்சம் விவசாயிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் முதற்கட்டமாக 1 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. 4 மாதங்களுக்கு 1 லட்சம் இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டுத் தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments