Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுக்கு பின் தோனி வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்: முக ஸ்டாலின்

Webdunia
ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (07:32 IST)
ஓய்வுக்கு பின் தோனி வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்
கிரிக்கெட் உலகின் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி நேற்று தனது ஓய்வு முடிவை அறிவித்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தோனி ஓய்வு முடிவு குறித்து கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் பலர் கருத்து கூறி வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ஃபேஸ்புக்கில் இதுகுறித்து கூறியதாவது:
 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனையைத் தரும் செய்தியாகும்.
 
நெருக்கடியான தருணங்களிலும் தளராமல் வெற்றியை நோக்கி இந்திய அணியை வழிநடத்திய 'கேப்டன் கூல்' அவர்! கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. சர்வதேச கிரிக்கெட்டுக்குப் பிறகான அவரது வாழ்க்கை சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.
 
மேலும் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உடன் தோனி இருக்கும் புகைப்படத்தை முக ஸ்டாலின் பகிர்ந்து உள்ளார் என்பதும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments