கொரோனா முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என முக ஸ்டாலின் விளக்கம்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் வருகிற செப்யம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அதில் செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவும் அடங்கும். ஆம், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று இதற்கு முக ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில்கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன எனவும் விளக்கம் கொடுத்துள்ளார்.