தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
தமிழர் திருநாளான பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மாடுபிடி விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது.
இதனால் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளன. இந்த மனு விசாரணைக்கு வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.