தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. இதனால் தமிழகத்தில் கடந்த கடந்த மே 10 அன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. எனினும் கொரோனா தாக்கம் குறையாத நிலையில் கடந்த மே 31 ல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு 7ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கலாமா அல்லது தளர்வுகளற்ற ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து இன்று தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.