காஷ்மீர் தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியாவின் யூனியன் பிரதேசமாக இணைத்தது மத்திய அரசு. இதற்கு காஷ்மீர் அரசியல் தலைவர்களால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.
சில மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் இயல்பு நிலை மெல்ல திரும்பிய பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது இந்தியாவின் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் இருவரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”இந்த நாட்டில் சுதந்திர காற்றை சுவாசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. பிரதமர் மோடி காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்து விட வேண்டும்” என கூறியுள்ளார்.
மேலும் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை சிறைப்படுத்தியிருப்பதற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் அவர்களை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.