Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் - அமைச்சர் பாண்டியராஜன்

Webdunia
புதன், 13 மே 2020 (17:50 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு 10ம் வகுப்பு பொது தேர்வுகளை ஜூன் மாதம் நடத்துவதாக அறிவித்திருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் திட்டமிட்டபடி தேர்வை நடத்துவதில் தமிழக அரசு தீர்மானமாக உள்ளது. தேர்வுகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிராமத்தில், பேருந்து வசதிகள் இல்லாத பகுதிகளில் உள்ள மாணவர்கள் தேர்வுக்கு வர பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என பலர் வாதிட்டனர். இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தேர்வு எழுத இருக்கும் பள்ளி மாணவர்களின் முகவரி விவரங்கள் பெறப்பட்டு சிறப்பு பேருந்துகள் மூலம் அவர்கள் தேர்வு மையத்திற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும், மேலும் தேர்வு முடிந்ததும் மீண்டும் மாணவர்கள் பாதுகாப்பாக சிறப்பு பேருந்துகள் மூலமாகவே வீடுகளில் சேர்க்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பத்தாம் வகுப்பு தேர்வு இப்போது தேவையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் பாண்டியர் ஸ்டாலினை  விமர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது :

மு.க.ஸ்டாலின்  மாணவர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார். மாணவர்கள்  தேர்வுகள் முடிந்து விடுமுறை எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

திடீரென தமிழகம் வருகிறார் அமைச்சர் அமித்ஷா.. ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

இனி ஆதார் அட்டை தேவையில்லை.. முகம் ஒன்றே போதும்: மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு..!

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments