Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்ளோ பட்டும் அதிமுக அரசு பாடம் கற்கவில்லை! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (15:40 IST)
தமிழகத்தில் நிவர் புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக அரசு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று இன்று அதிகாலை கரையை கடந்த நிலையில் பல மாவட்டங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தும், தண்ணீர் சாலைகளில் தேங்கியும் உள்ள நிலையில் மீட்பு பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில் முன்னதாக புயல்களால் தமிழகம் பாதிக்கப்பட்டபோதும் அதிமுக அரசு அதிலிருந்து பாடம் கற்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “2015 பெருவெள்ளம் - பேரிடர்களிலிருந்து அதிமுக அரசு பாடம் கற்கவில்லை! CAG அறிக்கையும் கண்டுகொள்ளப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதிமுக அரசின் மெத்தனத்தால் இழப்பைச் சந்தித்திருக்கும் அனைத்து தரப்பினருக்கும் உடனடி உதவியாக ரூ.5000 வழங்கிடுக!” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் மவுசு அதிகரிக்கும் பொறியியல் படிப்புகள்! புதிய பிரிவுகளில் ஆர்வம்! - 2.25 லட்சம் பேர் விண்ணப்பம்!

பெண் பயணிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை.. 3000 ஆபாச வீடியோ பறிமுதல்.. கார் டிரைவர் கைது..!

ஹார்வர்ட் பல்கலை.யில் வெளிநாட்டு மாணவர்கள் படிக்க தடை! ட்ரம்ப் உத்தரவு- அதிர்ச்சியில் மாணவர்கள்!

திருமலையில் நமாஸ் செய்த இஸ்லாமிய நபர்.. வீடியோ வைரலானதால் பரபரப்பு..!

தவெக இன்னொரு பாஜகவின் ‘பி’ டீம்.. திமுகவில் இணைந்த இன்ஸ்டா பிரபலம் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments