Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்!

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (14:37 IST)
பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்புமிக்க வர்ணப்பூச்சுதான் புதிய கல்விக் கொள்கை என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
 
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.  
 
தற்போது உள்ள நடைமுறைகளிலிருந்து சிலவற்றை நீக்கியும், புதிய முறைகளை இணைத்தும் புதிய கல்வி கொள்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கல்வி கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மேலும் சமூக வலைத்தளங்களிலும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கருத்துக்கள் அதிக அளவில் எழுந்து வருகின்றன. 
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, சமூக நீதி - பன்முகத்தன்மைக்கு எதிரான #NEP2020 ஐ அதிமுக அரசு எதிர்க்காதது ஏன்? தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுக்கத் திட்டமா?
 
எம்ஜிஆர்,ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டனரா? என கேள்வி எழுப்பியுள்ளதோடு திமுகவை பூச்சாண்டினங்களாக் எவராலும் எதுவும் செய்து விட முடியாது. தமிழ் மக்களையும் திசை திருப்ப முடியாது. பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்புமிக்க வர்ணப்பூச்சுதான் புதிய கல்விக் கொள்கை. 

இன்னல் தரும் கல்விக்கொள்கை எதிர்ப்பிலும் வென்று சமூக நீதி காப்போம், சமத்துவ கல்வி வளர்ப்போம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்: தேதி அறிவிப்பு..!

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த விஜய்..!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

அடுத்த கட்டுரையில்
Show comments