Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்துறை அமைச்சருக்கு உள்ளூர் தலைவர் கொடுத்த பதிலடி!!

Advertiesment
உள்துறை அமைச்சருக்கு உள்ளூர் தலைவர் கொடுத்த பதிலடி!!
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (07:58 IST)
அமித்ஷா பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மூன்றாவது மொழியாக இந்தி பயிற்றுவிப்பதற்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என அறிவித்துள்ளார்.
 
இந்நிலையில் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமித்ஷா தனது ட்விட்டரில் இந்தி குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் “இந்திய கலாச்சாரத்தின் உடைக்க முடியாத அடையாளம் இந்தி. அதன் அசல் தன்மையும் எளிமையும்தான் இந்தியின் பலமே! 
 
இந்தி மற்றும் பிராந்திய மொழிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை அமைக்கப்பட்டுள்ளது. மொழி, கலாச்சாரம் என்று இந்தியா வேறுப்பட்டிருந்தாலும் ஒட்டு மொத்த தேசத்தையும் ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்தி இந்நாட்டை இருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது. இந்தியை காப்பாற்றுவதை விட கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பிளஸ் டூ மார்க் 595 மட்டுமே: அதிர்ச்சி தகவல்