Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலால் தவழ்ந்து காலை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தவர்!.. பழனிச்சாமியை விளாசிய ஸ்டாலின்..

Advertiesment
mk stalin
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் செய்யும் பிரச்சாரங்களில் தொடர்ந்து சொல்லிவரும் நிலையில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஈரோட்டில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு அவர் பேசியதாவது..

பெண்களை பாதுகாத்து கல்லூரிகளுக்கும், வேலைகளுக்கும் அனுப்பி வைத்து தலைநகர வைத்திருப்பது திராவிட மாடல அரசு. இந்த உண்மைகளை அவதூறுகளை பரப்பி மறைக்கலாம், திசை திருப்பலாம், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கொண்டுவந்து தமிழ்நாட்டை கபளீகரம் செய்யலாம் என்கிற கற்பனை கோட்டையில் இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி..

பொள்ளாச்சி வழக்கை விசாரிக்க முன்வராத பழனிச்சாமிக்கு பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது? சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்திருக்கிறது..

மெட்ரோ ரயில், 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்தது, நீட், சிஏஏ சட்டம் கொண்டு வந்தது, வேளாண் சட்டம், கல்வி நிதியை தராதது, ஜிஎஸ்டி இழப்பீடு, மாநில உரிமைகளை பறிப்பது என துரோகங்களின் முழு உருவமாக எடப்பாடி பழனிச்சாமியும், அவரின் கூட்டாளிகளுமான பாஜகவும்தான்’ என்று பேசினார்.

மேலும் தவழ்ந்து காலை வாரிவிட்டு ஆட்சிக்கு வந்தோம்.. இந்த திமுகவும் ஸ்டானும் ஒரு தேர்தலில் கூட ஜெயிக்க விடுவதில்லை என்ற பொறாமையில் பொய்யையும் புரளியையும் எடப்பாடி பழனிச்சாமி பரப்பி வருகிறார்’ என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும்.. மீண்டும்!.. விஜய்க்கு பல கட்டுப்பாடுகளை விதித்த புதுச்சேரி போலீஸ்!...