Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபாய்க்கு டீ வழங்கிய பாஜக தொண்டர் : மக்கள் இன்ப அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (16:27 IST)
தஞ்சை மாவட்ட பேரவூரணியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எதிரில் ராஜசேகர் என்பவர் (55) டீ கடை நடத்திவருகிறார். இவர் பாஜக கட்சியின் தீவிரமான் தொண்டர் ஆவார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக  கூட்டணி ஒட்டுமொத்தமாக 354 தொகுதிகளிலும், பாஜக கட்சி தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.இதனையடுத்து மோடி நேற்று மாலை 7 மணிக்கு குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் மாளிகையில் நடைபெற்ற விழாவின் மோடிக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப்பிரமாணம் செய்துவைத்தார்.

இரண்டாவது முறையாக மோடி பாரத பிரதமராகப் பதவியேற்றதை அடுத்து நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் கொண்டாடி இனிப்புக்கொடுத்து மகிழ்ந்தனர்.
 
இந்நிலையில் மோடி இரண்டாவது முறையாக மோடி பிரதனராகப் பதவியேற்றதையொட்டி ராஜசேகர் நேற்று ஒருநாள் மட்டும் தனது கடையில் பொதுமக்களுக்கு 1 ரூபாய்க்கு டீ வழங்கினார்.
 
இதனை எதிர்பார்க்காத மக்கள் ராஜசேகர் கடையில் வந்து டீக்குடித்துவிட்டு டீக்கு 1 ரூபாய் வழங்கினர்.இது மக்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகிறது. 
 
மோடி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் ரயில் நிலையத்தில் டீ விற்றவர் என்பதை அவரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments