Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காவலர்களுக்கு சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.4,500 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்

காவலர்களுக்கு சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.4,500 வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின்
, வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (12:28 IST)
காவலர்களுக்கு சீருடைப்படி  ஆண்டுக்கு 4,500 வழங்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். 
 
ஆவடி தாம்பரம் காவலர்களுக்கு உணவுப்படியாக ரூபாய் 300 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவலர்களுக்கு எரிபொருள் படி 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 370 லிருந்து 515 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். 
 
மேலும் சென்னை புறநகரில் புதிதாக மூன்று பெருநகர காவல் நிலையங்கள் ஏற்படுத்த படம் என்றும் காவல்துறையல் சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் காவலர்களுக்கு மகளிர் விடுதி கட்டி தரப்படும் என்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக சென்னையில் 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவித்தார். காவலர் அங்காடி வசதியை ஊர்காவலர் படையினருக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு இஸ்லாமியர் கூட எங்கள் கட்சியில் இருந்து வெளியேறியதில்லை: பிரேமலதா விஜயகாந்த்!