Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

120 இடங்களில் கண்டன பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின்

120 இடங்களில் கண்டன பொதுக்கூட்டம்: மு.க.ஸ்டாலின்
, திங்கள், 1 அக்டோபர் 2018 (22:57 IST)
அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எதிர்க்கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆளுங்கட்சி சமீபத்தில் தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை நடத்தியது.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வரும் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் ஆளும் அதிமுக அரசை கண்டித்து தமிழகத்தில் 120 இடங்களில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசுக்கு எதிராக ஆவேசம் காட்டியுள்ள அவர், அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில். கண்ட ன பொதுக்கூட்டம் நடத்தப்படும்.

அரசு விழாவில் முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி அப்பட்டமாக அரசியல் பேசுகிறார், அமைச்சர்கள் முதல், முதலமைச்சர் வரை அனைவர் மீதும் ஊழல் புகார் உள்ளது.

காற்றாலை ஊழல் குறித்து ஆதாரங்களை வெளியிட்டு வழக்கு போட கெடு விதித்தும் அமைச்சர் தங்கமணி, தயங்குவது ஏன்?

எனவே, அதிமுக ஆட்சி குறித்து, மக்களிடம் விளக்க   தமிழகம் முழுவதும்120 இடங்களில், கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களிடம் செல்வோம் -  மக்களுடன் செல்வோம்

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'பராசக்தி' படத்தை பாஜக தடை செய்திருக்கும்: ப.சிதம்பரம்