Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய முக அழகிரி! எங்கே தெரியுமா?

சென்னையில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய முக அழகிரி! எங்கே தெரியுமா?
, வியாழன், 3 ஜூன் 2021 (20:11 IST)
சென்னையில் கருணாநிதிக்கு மரியாதை செலுத்திய முக அழகிரி! எங்கே தெரியுமா?
முன்னாள் திமுக தலைவர் மற்றும் முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 98வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. திமுக தொண்டர்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் இன்று அவருடைய மெரினா பீச் சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர். குறிப்பாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலையிலேயே கருணாநிதி சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி இன்று காலை முதல் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தியதாக தகவல் வெளிவரவில்லை
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்திற்கு சென்ற முக அழகிரி அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினார். அப்போது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் இன்று 24,405 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு!