Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் மு.க.அழகிரி... உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டதால் சர்ச்சை!!

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (12:31 IST)
திமுக உறுப்பினர்களுக்கான ஆன்லைன் சேர்க்கையில் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள மு.க.அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கான உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திமுக ”எல்லாரும் நம்முடன்” என்ற பெயரில் எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாக திமுகவில் இணைவதற்கான திட்டத்தை மேற்கொண்டது.
 
இந்த திட்டத்தின் மூலம் எட்டு நாட்களில் 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்துள்ளதாக திமுக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கு மொபைல் எண் மற்றும் ஓடிபி மூலம் பதிவு செய்வது மட்டுமே போதும் என்பதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
 
ஆவணங்கள் சரிபார்ப்பு முறை இதில் இல்லை என்பதால் சிலர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயரிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயரிலும் சிலர் உறுப்பினர் அட்டைகளை பெற்று அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளனர்.
 
அந்த வகையில் தற்போது திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரிக்கு அவரது ஆதரவாளர் திமுக உறுப்பினர் அட்டையை வாங்கியுள்ளார். ஆம், நகார்கோவிலை சேர்ந்த கபிலன் என்பவர் ஆன்லைனில் விண்ணப்பித்து மு.க.அழகிரிக்கு திமுக உறுப்பினர் அட்டை வாங்கியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments