பள்ளிப் பாடங்கள் மீண்டும் குறைக்கப்படுகிறதா? – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (13:12 IST)
பள்ளி பாடத்திட்டங்களில் மீண்டும் சில பாடங்கள் குறைக்கப்படலாம் என பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த மாதம் முதலாக மீண்டும் பள்ளிகள் மெல்ல திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் குறுகிய காலத்தில் படிப்பதின் சிரமம் கருதி பாடத்திட்டங்களில் குறிப்பிட்ட பாடங்கள் சில குறைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் பாடத்திட்டம் மீண்டும் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் எனவும் பள்ளிகளில் ஏற்கனவே பாடத்திட்டம் குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் பாடங்கள் குறைக்கப்படாது எனவும் உறுதியாக தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments