Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பது எப்போது? அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (12:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நான்கு மாதங்களாக பள்ளிகள் திறக்கப் படவில்லை என்பதும் பத்தாம் வகுப்பு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதமே இந்த கல்வி ஆண்டுக்கு பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்பட வில்லை
 
ஏற்கனவே மூன்று மாதங்கள் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகி விட்ட நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரியாததால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பெரும் கவலையில் உள்ளனர். ஏற்கனவே மத்திய அரசு வரும் டிசம்பர் வரை பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று கூறியதால் இந்த கல்வி ஆண்டு மாணவர்களுக்கு வீணாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் தலைமைச் செயலகத்தில் முக்கிய ஆலோசனை செய்து வருகிறார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யும் அமைச்சர் செங்கோட்டையன் இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

கணவர் இறந்தது தெரியாமல் 5 நாட்களாக ஒரே வீட்டில் வசித்த மனைவி.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

இல்லாத இடத்திற்கு விளம்பரம் செய்த மகேஷ்பாபு.. நுகர்வோர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ்..!

நடிகை கார் மீது அரசியல்வாதி மகன் கார் மோதி விபத்து.. நடிகையின் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments