Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயக்குமார் வீட்டில் இரவில் நடந்த மீட்டிங்: என்ன பேசிக்கிட்டாங்க?

ஜெயக்குமார் வீட்டில் இரவில் நடந்த மீட்டிங்: என்ன பேசிக்கிட்டாங்க?

ஜெயக்குமார் வீட்டில் இரவில் நடந்த மீட்டிங்: என்ன பேசிக்கிட்டாங்க?
, வியாழன், 8 ஜூன் 2017 (09:45 IST)
தமிழக நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தற்போது தமிழக அரசியலில் முக்கியமான மற்றும் அதிகாரமிக்க நபராக வலம் வருகிறார். தமிழக அமைச்சர்களில் தினகரனை எதிர்த்து பேட்டி அளிக்க கூடிய ஒரே ஆள் அமைச்சர் ஜெயக்குமார் தான்.


 
 
அமைச்சர் ஜெயக்குமார் தான் எடப்பாடி அணியின் தற்போதைய அதிகாரப்பூர்வ குரலாக இருக்கிறார். இரண்டு முறை எடப்பாடி அணி தினகரனை ஒதுக்கி வைப்பதாக அறிவித்தபோது அதனை ஊடகங்களிடம் கூறியது அமைச்சர் ஜெயக்குமார் தான்.
 
இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் மீது தினகரனும் அவரது ஆதரவாளர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். இதனை அவர்கள் தங்கள் பேட்டிகளிலேயே வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தினகரன் தரப்பில் இருந்து ஆட்சியில் உள்ளவர்களுக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. இதனை எடப்பாடி அணி எப்படி எதிர்கொள்ள உள்ளது என்பது தான் வரும்கால அரசியலை தீர்மானிக்கும்.
 
இந்நிலையில் தினகரனின் நெருக்கடிகளை சமாளிப்பது குறித்து நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் வேலுமணி ஆகியோர் வந்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
இந்த ஆலோசனையில், தினகரன் தரப்பில் இருந்து கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஜெயகுமாரின் கூறியதாகவும் அதற்கு ஜெயகுமார், இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்த்ததுதான். ஆனால் இதற்கு பயந்து அவரை கட்சியில் சேர்த்தா மக்கள் மத்தியில் நமக்கு சுத்தமாக மரியாதை இருக்காது என கூறியதாக பேசப்படுகிறது.
 
மேலும் ஆட்சிய கலைக்கிறதால் அவங்களுக்கு எந்த நன்மையும் இல்லை எனவே ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது. அமைச்சரவையில் அவங்க ஆட்களுக்கு இடம் கேட்பாங்க நாம கொடுக்க கூடாது அப்படி கொடுத்த அவங்களுக்கு நாம அடிபணிந்ததாகிவிடும்.
 
ஆட்சியை கவுத்துடுவோம்னு மிரட்டுனா கவுத்துக்கோனு சொல்லிடுவோம், ஆனா அது அவங்களால முடியாது. இப்ப கட்சிய நம்ம கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தா தான் முடியும் இல்லைனா எப்பவுமே முடியாது. கட்சிக்காரங்க ஆதரவு நமக்குத்தான் இருக்கு என ஜெயக்குமார் பேசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரவு 12.30 மணிக்கு ஜெயக்குமார் வீட்டில் இருந்து கிளம்பியிருக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி தாராளமாக இலங்கை வரலாம். வெளியுறவுத்துறை அமைச்சர் ரவிகருணாணயாகே