Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

ரூ.9.76 கோடி மதிப்பீட்டில்  புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

J.Durai

, செவ்வாய், 22 அக்டோபர் 2024 (09:04 IST)
திருப்பூர் மாவட்டம், 
தாராபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும்  மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ்  ஆகியோர்கள் 
தாராபுரம் வருவாய் கேட்டாட்சியர் பெளிக்ஸ் ராஜா முன்னிலையில்  துவக்கி வைத்து, வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய கட்டடங்களை திறந்து வைத்தனர்.
 
இதனைத் தொடர்ந்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்ததாவது......
 
தமிழ்நாடு முதலமைச்சர் 
தமிழக மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது மாவட்டங்களில் இருக்கக்கூடிய திட்டப்பணிகளை அனைத்தும் விரைவாக மக்களுடைய பயன்பாட்டு ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். 
 
தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத்திட்டம், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்குதல், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
 
புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் பொருட்டு அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ் படிப்பு. பட்டயப்படிப்பு. பட்டப்படிப்பு. தொழிற்கல்வி ஆகியவற்றில் இடை நிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
                                                                          அந்த வகையில்  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி, திருப்பூர் சாலை வார்டு எண்.2-ல் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கழிப்பிடத்தை திறந்து வைத்து, அலங்கியம் சிக்னல் தென்புறம் 30-வது வார்டு ஆலடிக்களத்தில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ஆலடிக்களம் பாதை முதல் வடக்கு எல்லையான காமராஜபுரம் வரை ராஜவாய்காலின் பக்கவாட்டில் வடிகால் அமைத்து கழிவு நீர் சேகரிப்பு கிணறு ரூ.9.50 கோடி  மதிப்பீட்டில்  அமைக்கும் பணியினை துவக்கி வைத்து,
 
தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், சின்னப்புத்தூர் ஊராட்சி, சத்திரத்தில் கே771 சின்னப்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் புதியதாக கட்டப்பட்ட கூட்டுறவு மருத்தகத்தினை திறந்து வைத்து, பொன்னாபுரம் ஊராட்சி, பொன்னாபுரத்தில் டி.டி.2 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தினை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு கடனுதவிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டது என தெரிவித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளை ‘டானா’ புயல்..!