Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டா சரக்கை தொடவே கூடாது! மீறி தொட்டால்? – அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (10:48 IST)
கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட உள்ள நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவசர கால தடுப்பூசியாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் மருந்துகளை மக்களுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி கொரோனா தடுப்பூசிகள் இந்திய மாநிலங்கள் முழுவதற்கு அனுப்பப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கொரோனா முன்கள பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டு 28 நாட்கள் கழித்து 2வது டோஸ் என செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் “கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொள்பவர்கள் இரண்டாம் டோஸ் போடப்படும் வரை இடையே 28 நாட்களுக்கு மது அருந்தவே கூடாது. அவ்வாறு அருந்துவது மருந்தை செயல்படாமல் செய்து விடலாம்” என்று எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments