Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொடுமை.. இசைப்புயலுக்கே இந்த நிலைமையா? – ஆதரவாக வந்த அமைச்சர் வேலுமணி

Advertiesment
கொடுமை.. இசைப்புயலுக்கே இந்த நிலைமையா? – ஆதரவாக வந்த அமைச்சர் வேலுமணி
, செவ்வாய், 28 ஜூலை 2020 (10:41 IST)
பாலிவுட்டில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக ஏஆர் ரகுமான் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், தனக்கு எதிராக சிலர் பல சதிவேலைகளில் ஈடுபடுவதாகவும் சமீபத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் களம் இறங்கிய அவரது ரசிகர்கள் பலர் பாலிவுட் சினிமாவை வறுத்தெடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை குஷ்பூ, இயக்குனர் ஷேகர் கபூர், ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் ஏஆர் ரகுமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ள தமிழக அமைச்சர் எஸ்பி வேலுமணி ” பாலிவுட்டில் தனக்கு எதிராக ஒரு தரப்பினர் வதந்தி பரப்பி, நல்ல படங்களும் அதிக வாய்ப்புகளும் கிடைக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளனர் என்று இந்திய மக்களின் இதயம் மட்டுமல்ல உலகளவில் இமயம் தொட்ட நம் தமிழ் மண்ணின் ஆஸ்கர் நாயகன் திரு. ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளது மிகவும் வருத்தமளிக்கிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும் “எல்லைகளில்லா இசையை எல்லைகள் கடந்து இயக்கி இந்தியாவிற்கே புகழ் சேர்த்த நமது இசைப்புயல் திரு. ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள். அவருக்கு என்னுடைய மனப்பூர்வமான ஆதரவை பதிவு செய்து கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேரலையில் நிர்வாணமாக நடந்து சென்ற நெறியாளரின் மனைவி – பகீர் சம்பவம்!