மதுரை உயர்நீதிமன்ற கிளை குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அப்படி ஒரு வார்த்தை பயன்படுத்தியது எனக்கு காலையில் தான் தெரியவந்தது என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரை உயர்நீதிமன்ற கிளை கலைஞர் கொடுத்த கொடை என்பதற்கு பதிலாக தவறான வார்த்தை பயன்படுத்தி விட்டேன் என்றும் அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தையை திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
அமைச்சர் எ.வ.வேலு கூறிய சர்ச்சை கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அவர் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.