Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: மேல்முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி..!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்: மேல்முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி..!
, வியாழன், 26 அக்டோபர் 2023 (13:00 IST)
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்த்ஹின் மேல்முறையீட்டு மனுக்களை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டன;
 
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் - சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று ஆய்வு செய்தோம். அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினோம்.
 
அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை எடுத்துக் கூறிய போது, அதன் நியாயத்தை உணர்ந்து, நாம் கூறியதை ஏற்றுக் கொண்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை கேட்டுக் கொண்டோம்"
 
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் X தளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் திமுக பிரமுகர் கொலை.. வீடு புகுந்து வெட்டிய மர்ம நபர்கள்..!