காவல்துறையை கடுமையாக பேசிய கருணாஸை கைது செய்த போலீஸ், அதைவிட கடுமையாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர்கள் கேட்டு வரும் நிலையில் இந்த கேள்விக்கான விடையை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா என்பவர் இந்தியாவிலுள்ள 19 மாநிலங்களை ஆட்சி செய்யும் கட்சியை சேர்ந்தவர். கொள்கை, லட்சியத்தோடு உள்ள மாண்புமிகு பாரத பிரதமர் தலைமையில் இயங்குகின்ற, இந்த தேசத்திற்காக உழைத்த ஒரு இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர். இந்த இடத்தை அவர் அடைவதற்கு எத்தனை உழைப்புகள், சேவைகள், தியாகங்கள் செய்திருப்பார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்
அவரையும், அதிர்ஷ்டத்தால் எம்.எல்.ஏ ஆகி, இன்று அதிர்ஷ்டத்தை தொலைத்துவிட்டு விளம்பரத்திற்காக உளறும் கருணாஸையும் ஒப்பிட கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். ஒருசில அதிமுக அமைச்சர்கள் பாஜகவை தாக்கியும், ஒருசில அதிமுக அமைச்சர்கள் பாஜகவை புகழ்ந்தும் பேசி வருவதால் இருகட்சிகளுக்கு இடையே உள்ள உறவை புரிந்து கொள்ளவே முடியவில்லை என நெட்டிசன்கள் புலம்பி வருகின்றனர்