பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை திமுகவை சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களது சொத்து பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் இந்த பட்டியலில் உள்ள தகவல்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ள திமுக பிரமுகர்கள் அதற்கான ஆதாரங்களை அண்ணாமலை காட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்., உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகள் முன்வைத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரூ.2039 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை பட்டியல் வெளியிட்ட நிலையில், திமுக வழக்கறிஞர் பி.வில்சன் முலம் உதய நிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், 48 நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் ரூ. 50 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோடி வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.