Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினகரனை அதிர வைத்த தங்கமணியின் சாட்டையடி கேள்வி!

தினகரனை அதிர வைத்த தங்கமணியின் சாட்டையடி கேள்வி!

Advertiesment
அமைச்சர்
, செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (12:32 IST)
தற்போது அதிமுக கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து விலகுவது போன்ற அரசியல் சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலா குடும்பம் அதிமுகவை கபளீகரம் செய்வதை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார் ஓபிஎஸ்.


 
 
இதனையடுத்து சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் அவரது அக்காள் மகன் டிடிவி தினகரனை கட்சியில் சேர்த்து துணைப் பொதுச்செயலாளர் பதவியை வழங்கினார் சசிகலா. அதன் பின்னர் அதிமுகவில் அவர் வைத்தது தான் சட்டம் என்ற நிலை வந்தது. இது மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.
 
இந்நிலையில் அதிமுக அரசியல் ரீதியாக இரட்டை இலை சின்னம் முடக்கம் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளில் உள்ளது. இவை அனைத்திற்கும் காரணம் தினகரன் தான் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். இந்நிலையில் வெளிப்படையாக தினகரனை எதிர்த்து உதறித்தள்ளிவிட்டு வெளியே வர தயாராகிவிட்டனர் அதிமுக அமைச்சர்கள்.
 
கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு அன்று தினகரனை சந்திக்க சென்ற அமைச்சர்கள் தினகரனை ராஜினாமா செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் இதனை தினகரன் முற்றிலுமாக மறுத்தார் புத்தாண்டு வாழ்த்து கூற தான் அமைச்சர்கள் வந்ததாக வழக்கம் போல சிரித்தவாறே கூறினார்.
 
ஆனால் அன்று தினகரனை சந்திக்க சென்ற அமைச்சர்கள் அவரிடம் பேசியது என்ன என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அதில் அமைச்சர் தினமணி தினகரனிடம் கூறியதாவது, அதிமுக என்ற கட்சியை அம்மா உயிரை கொடுத்து வளர்த்தார். ஆனால் அந்த கட்சி இப்போது அழிவுப்பாதைக்கு செல்லும் நிலை வந்துவிட்டது.
 
இதற்கு முக்கிய காரணமே உங்கள் குடும்பம் தான், மக்களிடமும் செல்வாக்கு இல்லாமல், கட்சியிலும் செல்வாக்கு இல்லாமல் நீங்கள் தொடர்ந்து எதற்கு இந்தப் பதவியில் இருக்க வேண்டும் என தங்கமணி கேட்ட கேள்வியால் தினகரன் அதிர்ந்து விட்டாராம். அதன் வெளிப்பாடு தான் அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று இரவு அமைச்சர்கள் அனைவரும் ஆலோசனை நடத்தியது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவின் இரு அணிகளும் இணைகிறதா? -நடப்பது என்ன?