Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வெட்டு குறித்து ட்விட் போட்ட பிசி ஸ்ரீராம்.. உடனடியாக பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு..!

Webdunia
திங்கள், 26 ஜூன் 2023 (11:50 IST)
மின் வேட்டு குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் போட்ட நிலையில் உடனடியாக அமைச்சர் தங்கம் தெனரசு அதற்கு பதில் அளித்துள்ளார். 
 
சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். 
 
இதனை அடுத்து உடனடியாக அதற்கு பதில் அளித்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது நகர் முழுவதும் மின்சாரத் துறையின் பணிகள் நடந்துகொண்டு வருவதாகவும் இதனால் குறைந்தபட்ச இடையூறுகளை தவிர்க்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் 
 
இருப்பினும் உங்கள் பகுதியில் மின்வெட்டு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றும் உங்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். மின்சார துறை அமைச்சரின் இந்த உடனடி பதில் அவரது நன்மதிப்பை உயர்த்தி உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments