Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையின் பொழுதுபோக்கே அண்ணன் செல்லூரார்தான்..! – தங்கம் தென்னரசு கலாய்!

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (12:52 IST)
சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ குறித்து பேசியது வைரலாகியுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டு பட்ஜெட் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு துறைகளுக்குமான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இன்று சட்டமன்றத்தில் விவாதங்கள் நடந்து வந்த நிலையில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரையில் கேளிக்கை பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக பேசியதுடன், மதுரையில் மக்களுக்கு சரியான பொழுதுபோக்கு இல்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கே அண்ணன் செல்லூர் ராஜூதான் என நகைச்சுவையாக கூறியுள்ளார். இதனால் சிறிதுநேரம் அங்கு சிரிப்பலை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments