Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

Advertiesment
குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!
, சனி, 16 டிசம்பர் 2023 (07:21 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஆகி வருவதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக நேற்று பாமக தலைவர் அன்புமணி இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் இத்தனை மாதம் ஆகியும் குரூப் 2 தேர்வு முடிவுகள் ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து கூறியதாவது: குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் மிக விரைவில் வெளியாகும். மேலும் கால தாமதத்திற்கான காரணம் குறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விரைவில் வெளியிடும் என தெரிவித்தார்.

ஏற்கனவே அவர் கடந்த மாதம் அளித்த செய்தியாளர் சந்திப்பின்போது, ‘ டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை எழுத்து தேர்வின் முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் தற்போது 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பீட்டு பணிகள் முடிந்து விட்டது என்றும் எஞ்சியுள்ள பணிகள் டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம்.. இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள் இதுதான்..!