கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணம் செய்யும் பயணிகள் யாரும் குறை கூறவில்லை என்றும் பேருந்தில் பயணம் செய்யாதவர்கள் தான் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சட்டசபையில் இன்று கிளாம்பாக்கம் விவகாரம் குறித்து அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.
கிளாம்பாக்கம் விவகாரம் இன்று சட்டசபையில் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில் தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை சென்னையில் உள்ளே கொண்டு வந்து விட வேண்டும் என்று செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.
அப்போது அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்த போது கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சியில் தான் என்றும் இப்போது சென்னை உள்ளே வந்துவிட வேண்டும் என்று அவர்களை கூறுவது முரணாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்
மேலும் பேருந்தில் பயணம் செய்ய மக்கள் யாரும் புகார் கூறவில்லை என்றும் பேருந்தில் பயணம் செய்யாதவர்கள் தான் புகார் கூறி வருகின்றனர் என்றும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்
மேலும் அமைச்சர் சேகர்பாபு இது குறித்து கூறிய போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை, சுமைகளை வைக்க டிராலி, பேட்டரி கார்கள், நடை மேம்பாலம், மின் தூக்கி என அனைத்து வசதிகளும் உள்ளது, தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று தெரிவித்தார்