மீண்டும் ஜாமின் மனு தாக்கல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி.. நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 10 அக்டோபர் 2023 (12:07 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்த நிலையில் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
பண மோசடி வழக்கில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில்  சென்னை ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்களிடம் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையிட்ட நிலையில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 நாளைய விசாரணையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments