அகரம் அறக்கட்டளை சார்பாக நடந்த விழாவில் சூர்யாவைப் பற்றி தான் தவறாக நினைத்து விட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
கிராமப்புற மாணவர்களுக்காக நடத்தப்படும் மாணவரளுக்கான அகரம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய காயத்ரி என்ற மாணவி தான் பட்ட கஷ்டங்களை அனைவரையும் நெகிழ வைத்தார்.
அதன் பிறகு பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ‘ சிங்கம் படத்தில் வில்லன்களை சூர்யா அடிப்பதைப் பார்த்து இவருக்கெல்லாம் மனித நேயம் இருக்குமா என நினைத்தேன். ஆனால் அவர் செய்யும் உதவிகளைப் பார்த்து அவரைப் பற்றிய பிம்பம் மாறிவிட்டது. அடுத்த வாரம் முதல் இனி அரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி அளிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.