Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ் 1 வகுப்பில் ஃபெயிலா? கவலை வேண்டாம்! பிளஸ் 2 படிக்கலாம்

பிளஸ் 1 வகுப்பில் ஃபெயிலா? கவலை வேண்டாம்! பிளஸ் 2 படிக்கலாம்
, சனி, 19 ஆகஸ்ட் 2017 (05:30 IST)
பிளஸ் 1 வகுப்பில் ஏதாவது ஓரிரு பாடங்களில் மாணவர்கள் ஃபெயில் ஆகியிருந்தாலும் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம் என்றும் கல்லூரிகளின் அரியர்ஸ் போலவே பிளஸ் 2 படிக்கும்போதே ஃபெய்யிலான பாடங்களின் தேர்வுகளை எழுதலாம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால் ஃபெயிலான மாணவர்களுக்கு ஒருவருடம் வீணாக போகாது என்பது குறிப்பிடத்தக்கது



 
 
மேலும் இனிமேல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண் என்ற அடிப்படையில் 600-க்கு மதிப்பெண்கள் மட்டுமே கணக்கிடப்பட உள்ளதாகவும், பிளஸ்-1 வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 வகுப்பில் சேர்ந்து ஜூன் மாதம் நடத்தப்படும் தேர்வில் பிளஸ்-1 தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம் என்றும் இதனால் மாணவர்களின் மன உளைச்சல் நீங்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
மேலும் நீட் உள்பட மத்திய அரசு கொண்டு வரும் அகில இந்திய அளவிலான பொதுத்தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ள  52 ஆயிரம் வினாக்களை கொண்ட டிவிடி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பொது நுழைவுத்தேர்வுக்காக மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க 450 மையங்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தர்மயுத்தம், மர்மயுத்தம் ஆனது ஏன்? ஓபிஎஸ்-ஐ கட்டுப்படுத்தும் மர்ம சக்தி எது?