Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி திடீரென அறிவிக்கப்பட்டதா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:43 IST)
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிளஸ் டூ பொதுத்தேர்வு திடீரென அறிவிக்கப்பட்டதா? என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார் 
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் எந்தவித குழப்பமும் இல்லை என்றும் பொதுத் தேர்வு அட்டவணையை ஏற்கனவே தயாராக வைத்து இருந்தோம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார் 
 
மேலும் தேசிய திறனாய்வு தேர்வு கட்டணத்தை அரசே செலுத்துவது குறித்து முதல்வரிடம் வரும் 21ம் தேதி ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்றும் கேள்வி ஒன்றுக்கு செங்கோட்டையன் பதிலளித்தார்
 
சற்றுமுன் அறிவிக்கப்பட்ட பிளஸ் 2 தேர்வின் முழு அட்டவணை இதோ:
 
 
மே 3ம் தேதி - மொழிப்பாடம்
 
மே 5ம் தேதி - ஆங்கிலத் தேர்வு
 
மே 7ம் தேதி - கணினி அறிவியல், உயிரி வேதியியல், மனையியல், அரசியல் அறிவியல், 
மே 11ம் தேதி - இயற்பியல், பொருளியல், மே 17ம் தேதி கணிதம், வணிகவியல், விலங்கியல்
 
மே 19ம் தேதி - உயிரியல், தாவரவியல், வரலாறு 
 
மே 21ஆம் தேதி வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments