Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயம் பதுக்கினால் கடுமையான தண்டனை: செல்லூர் ராஜு எச்சரிக்கை

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (16:55 IST)
வெங்காய விலை அதிகரித்து வரும் சூழலில் யாராவது வெங்காயத்தை பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையிப்னால் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனால் நாடெங்கிலும் வெங்காய தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கூடவே வெங்காய விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. சில மாநில அரசுகள் அங்காடிகள் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயத்தை விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழகத்திலும் வெங்காய விலை உயர்வு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல வணிகர்கள் வெங்காயத்தை பதுக்கி வைத்திருந்து விலையேற்றத்தின் போது விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அமைச்சர் செல்லூர் ராஜு தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனை கடைகள் 50 டன்னுக்கும் அதிகமாக வைத்துக் கொள்ள கூடாதென்றும், அதற்கு அதிகமாக வைத்திருந்தாலோ, பதுக்கு வைத்திருந்து பிடிபட்டாலோ கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

வாரத்தின் முதல் நாளே அமோகம்.. 1100 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த சென்செக்ஸ்..!

இன்று ஒரே நாளில் 800 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments