Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி ஆட்சியை பிடிக்க முடியாது, ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்: செல்லூர் ராஜூவின் சர்ச்சை பேச்சு

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (15:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தினமும் ஒரு அதிமுக அமைச்சர்கள் டைம்டேபிள் போட்டு விமர்சனம் செய்து கொண்டு வரும் நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் ரஜினியை விமர்சனம் செய்துள்ளார்.
 
இன்று அவர் அளித்த பேட்டியின்போது ரஜினி பற்றிய கேள்விக்கு ரஜினியால் ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் காரைக்குடி ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
அமைச்சரின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் அமைச்சருக்கு தங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம் என்று அமைச்சர் சொல்லியிருப்பது புண்படுத்துகிற பேச்சாகும் என்றும் இதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
 
ஆச்சி என்பது காரைக்குடி பகுதியில் வயது முதிர்ந்த பெண்களை குறிக்கும் சொல் என்பதால் அமைச்சரின் பேச்சு பெண்களை இழிவுபடுத்தியதாக இருப்பதாக  காரைக்குடி நகரத்தார் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments