கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா.. என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (13:01 IST)
கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா.. என்ன காரணம்?
உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகிய இருவரும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடந்து வந்த பாதையை விளக்கும் புகைப்பட கண்காட்சி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அமைச்சர் சேகர்பாபு மற்றும் நேயர் பிரியா அழைப்பு விடுத்தனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 28ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற உள்ள இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்து விட்டதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
 
தமிழக முதல்வரின் 70 ஆண்டு பொது வாழ்க்கை பயணத்தின் கண்காட்சியை திறந்து வைக்க சம்மதம் தெரிவிப்பதற்கு கமலஹாசனுக்கு நன்றியையும் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments