கொரோனா முடியட்டும்.. 7 நாளும் கோவில் திறக்கப்படும்! – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

Webdunia
வியாழன், 7 அக்டோபர் 2021 (12:00 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக வார இறுதிகளில் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விரைவில் முழுமையாக திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காராணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கோவில்கள் திறக்கப்பட்டிருந்தாலும் வார இறுதிகளான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டுள்ளது. மேலும் திருவிழாக்களும் நடத்த தடை உள்ளது. இதனால் மக்கள் பலர் கோவில்களை முழுமையாக திறக்க வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் சேகர் பாபு “ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின் பேரில்தான் கோவில்கள் 3 நாட்களுக்கு மூடப்படுகின்றன. தமிழகத்தில் கொரோனா குறைந்தவுடன் வாரத்தின் 7 நாட்களிலும் கோவில்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; சதியை முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

'ரஃபேல்' விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்: பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் முறியடிப்பு!

X.com டொமைன் மாற்றம்: நவம்பர் 10 முதல் twitter.com செயல்படாது.. லாகின் செய்ய 2FA தேவை..!

மருத்துவ சிகிச்சைக்காக சாமியார் அசராமுக்கு 6 மாத இடைக்கால ஜாமீன்! நீதிமன்றம் உத்தரவு..!

தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி கோவாவில் கைது! போதைப்பொருள் ஆலை நடத்தியவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments