ரஜினி, கமல் காலாவதியாகி விட்டனர்! – ஆர்.பி.உதயகுமார் பதில்!

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (12:35 IST)
அரசியல் வெற்றிடம் குறித்து ரஜினி பேசிய கருத்துக்கு பதில் அளிக்கும் விதத்தில் பேசியுள்ளார் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

அதிமுக அரசின் சாதனையை விளக்க நடைபயண பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். இந்நிலையில் உசிலம்பட்டி அருகில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ”தமிழகத்தில் உள்ள அரசியல் வெற்றிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நிரப்பிவிட்டார். 2021ல் மீண்டும் அவரே முதல்வராக வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்” என கூறியுள்ளார்.

ரஜினி, கமல் குறித்து பேசிய அவர் ”ரஜினி, கமல் ஆகியோர் திரைத்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இப்போது அவர்கள் காலாவதியாகி விட்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’மோந்தா’ புயல் எப்போது, எங்கே கரையை கடக்கும்? வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய தகவல்..!

கர்நாடக அமைச்சரவையில் 'காமராஜ் திட்டம்' அமல்? 12 மூத்த அமைச்சர்களுக்குக் 'கல்தா'

அதானிக்கு ரூ.33,000 கோடி ரகசியமாக நிதி வழங்கியதா மத்திய அரசு? வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகளிடம் காட்டவில்லை': நயினார் நாகேந்திரன்

சாலையில் இருந்த குழியால் பெண் வங்கி அதிகாரி பரிதாப பலி.. மோசமான சாலையை செப்பனிடாததால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments