Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களை தூண்டிவிட்டு ஆதாயம் தேடுகிறார்கள்! – அமைச்சர் பாய்ச்சல்!

Webdunia
வியாழன், 7 மே 2020 (15:16 IST)
மதுக்கடைகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் 42 நாட்கள் கழித்து சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது “மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் பலர் மது வாங்க வெளிமாநிலங்களுக்கு செல்லும் அபாயம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு என்ன நன்மை செய்தாலும் போராட்டங்கள் நடத்தி மக்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடவே எதிர்க்கட்சிகள் முயல்கின்றன” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments