அதிமுகவில் சசிகலா... தகவலை கசிய விட்ட அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (19:46 IST)
சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா என பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டியளித்துள்ளார். 
 
திருவண்ணாமலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நிரப்பிவிட்டனர். 
 
மக்களிடத்திலே எடப்பாடி பழனிசாமிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால்தான் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக மாபெரும் வெற்றி பெற்றது. இது அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம்.
 
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் சர்வாதிகாரியாக செயல்படுவேன் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இதன் மூலம் மக்களையும் மற்ற கட்சிகளையும் மிரட்டுகிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அவரது கனவு பலிக்காது.
 
அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்ப்பது குறித்து முதல் அமைச்சர் துணை முதல் அமைச்சர் முடிவு செய்வார்கள். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார். உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி நாயகன் எடப்பாடி பழனிசாமி செல்வாக்கு பிரதிபலிக்கும் என பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments