Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்ப்பாட்டத்துக்கு கூட 50 பேர் சேர்க்க முடியலை! – காங்கிரஸை கலாய்த்த ராஜேந்திர பாலாஜி

Webdunia
புதன், 18 செப்டம்பர் 2019 (12:16 IST)
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தொடங்கினர். இந்நிலையில் அவர்களை கிண்டல் செய்யும் தோனியில் பேசியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

முன்னாள் நிதியமைச்சரும், தமிழக காங்கிரஸில் முக்கிய தலைவருமான ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் காங்கிரஸ் தலைவர்களே அதில் கலந்து கொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. காங்கிரஸ் எதிர்க்கட்சியான திமுகவின் கூட்டணி கட்சி என்பதால் அதிமுக அமைச்சர்களும் சிதம்பரத்தின் கைதுக்கு பாஜகவை பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ஆர்ப்பாட்டத்துக்கு 50 பேர் கூட சேர்க்க முடியாததெல்லாம் ஒரு கட்சியா?” என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொண்டது போல சோனியா காந்தியையோ, ராகுல் காந்தியையோ ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் மோடியின் மகத்தான திட்டங்களையும், அவரது புகழையும் தொடர்ந்து மக்களிடம் சென்று சேர்ப்போம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments