Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசிங்கமாக திட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: ஆர்கே நகரில் பரபரப்பு!

அசிங்கமாக திட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: ஆர்கே நகரில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 4 ஏப்ரல் 2017 (10:41 IST)
ஆர்கே நகர் தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரனை எதிர்த்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்த இரு அணிகளும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


 
 
இந்த பிரச்சாரத்தின் போது சசிகலா அணியில் உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓபிஎஸ் அணியில் உள்ள பெண் பேச்சாளர்கள் இருவரை அசிங்கிமாக திட்டியதாகவும், தாக்கியதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
ஆர்கேநகர் தொகுதியில் A.E.கோவில் தெருவில் ஓபிஎஸ் அணியின் மதுசூதனனுக்கு ஆதரவாக பொம்மி, உமையாள் என்ற இரண்டு பெண் நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால் அதே நேரத்தில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் பிரச்சாரம் செய்து வந்தார்.
 
அப்போது ஓபிஎஸ் அணியின் பெண் நிர்வாகிகளான பொம்மி, உமையாள் ஆகியோர்களை பார்த்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். அவர்களை அசிங்கமாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உமையாள் என்ற பெண்ணின் மூக்கில் குத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெண்ணை சசிகலா அணியை சேர்ந்த அமைச்சர் அசிங்கமாக பேசி தாக்கியதால்அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பெண்கள் இருவரும் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments