Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியை -அமைச்சர் பெரிய கருப்பன் திறந்து வைத்தார்

Advertiesment
Minister Periya Karuppan

J.Durai

சிவகங்கை , திங்கள், 11 மார்ச் 2024 (16:50 IST)
சிவகங்கை மாவட்டம் ஆட்சியரகப் பகுதியில் உள்ள  சமுதாய கூடத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக தமிழக அரசின் சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சி சிவகங்கை மாவட்டம் ஆட்சியர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது 
 
இந்த புகைப்பட கண்காட்சியை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன்  திறந்து வைத்து புகைப்பட கண்காட்சி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி பொருட்கள்  கண்காட்சி மற்றும் சுகாதாரத்துறை மூலம் செய்யப்படும் மருத்துவ பரிசோதனை ஆகியவைகளை  பார்வையிட்டார்
 
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ராஜ செல்வன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் செய்திருந்தனர் 
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் விஜய சந்திரன் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளலூர் குப்பை கிடங்கை முதலமைச்சர்- பார்வையிடாவிட்டால் உண்ணாவிரத போராட்டம்.