Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எம்ஜிஆர் தோற்றத்தில் விஜய் போஸ்டர்: வரவேற்கத்தக்க விஷயம் என அமைச்சர் பாராட்டு

Advertiesment
எம்ஜிஆர் தோற்றத்தில் விஜய் போஸ்டர்: வரவேற்கத்தக்க விஷயம் என அமைச்சர் பாராட்டு
, வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (08:01 IST)
கடந்த சில நாட்களாக எம்ஜிஆரின் போஸ்டர்களை போலவே விஜய் போஸ்டர்கள் உருவகப்படுத்தி மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டு வருவது தெரிந்ததே. மதுரையை ஆரம்பித்த இந்த எம்ஜிஆர்-விஜய் போஸ்டர் கலாச்சாரம் தற்போது தமிழகம் எங்கும் பரவி வருகிறது என்பதும் விஜய் ரசிகர்கள் எம்ஜிஆரின் முக்கிய திரைப்படங்களில் இருக்கும் ஸ்டைலில் விஜய்யை உருவகப்படுத்தி போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
மேலும் விஜய் தான் அடுத்த முதல்வர் என்ற கருத்தில் பல வாசகங்கள் அந்த போஸ்டர்களில் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர்களுக்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் போஸ்டர்கள் கிழிப்பு, விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு ஆகியவையும் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எம்ஜிஆர் பாணியில் விஜய் போஸ்டர் ஒட்டப்பட்டு வருவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதாவது: எம்ஜிஆர் தோற்றத்தில் நடிகர் விஜய்க்கு ஒட்டிய போஸ்டர் குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை. அது ரசிகர்களின் விருப்பம். எம்ஜிஆர் ஜெயலலிதா போலவே அவர் இருக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நினைப்பதில் எந்த தவறுமில்லை. அது வரவேற்கத்தக்க விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு போகாத வரை எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனெனில் எம்ஜிஆர் பெயரை சொல்லி ஓட்டுக் கேட்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்தார்’ அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜகவில் இணைகிறாரா கங்கனா ரனாவத்? மத்திய அமைச்சர் சந்தித்ததால் பரபரப்பு!